குருத்தோலை அறக்கட்டளை

குருத்தோலை அறக்கட்டளை செல்லமுத்து குப்புசாமியால் நிறுவப்பட்டு, நடத்தப்படும் அமைப்பாகும்.

அறக்கட்டளையின் முதன்மையான நோக்கங்கள்:

  • பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், பல்கலைக் கழகங்கள், ஆய்வுக் கூடங்கள் ஆகியவற்றுக்கான நிதி உதவி வழங்குவதன் மூலம் மாணவர்களின் பயன்பாட்டுக்கும், மேம்பாட்டுக்கும் வழி வகுப்பது

  • கல்வி ஊக்கத் தொகை, புத்தகங்கள், பரிசுகள், பதக்கங்கள், கணினி மற்றும் ஏனையை படிப்பு சம்பந்தமான உதவிகளை வழங்குவது

  • கல்வி நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து கற்றலிலும், கற்பித்தலிலும் புதுமையான அணுகுமுறைகளை ஊக்குவிப்பது

  • கல்வியளிக்கும் வலையிலான எழுத்துக்களை அச்சிடுதல், பதிப்பித்தல்

  • நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச் சூழல் பேணுவது தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் செயல்படுதல்

  • குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர் வாருதல், மழை நீர் சேமிப்பு, மண் அரிப்பைத் தடுப்பது உள்ளிட்ட செயல்களை மேற்கொள்ளுதல், அவற்றுக்கு துணை நிற்பது மற்றும் நிதி உதவி வழங்குவது

  • மரம் நடுவது மற்றும் மரம் நடுவது மற்றும் பேணுவது தொடர்பான செயல்களுக்கு உதவி செய்வது

  • வயதானோர், ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் செயலாற்றும் இல்லங்களுக்கு உதவுவது

  • பொது நல நோக்கில் இயங்கும் ஏனைய தொண்டு நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்வது

2 comments: